மட்டக்களப்பின் முதுகெலும்பு என்பதனை விட அதன் இருதயமாக இருப்பது அந்த மாவட்டத்தினை வளப்படுத்தும் மண்ணும் மனிதர்களும்தான். ஒரு பிரதேசம் வளர்ச்சி பெற வளங்கள் தேவை என்பது அபிவிருத்தியாளர்களது சிந்தனையாக இருந்து வந்தது. அது மனித வளம் மற்றும் பௌதிக வளம் என்ற இரண்டையும் குறிக்கும். ஆனால் இவற்றில் பௌதிக வளம் இல்லாமலேயே, மனித வளத்தினை மாத்திரம் உரமாக்கி அபிவிருத்தி கண்ட யப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் எம்முன் உதாரணமாக இருக்கும் போது, எல்லா வளமும் கொண்ட எமது மட்டக்களப்பு மாவட்டம் இன்னும் இன்னும் வறுமையில் தவிக்கும் மாவட்டமாக இருப்பது ஒன்றும் புரியாத புதிர் இல்லை.
விவசாயம் இவர்களின் இரத்தத்தில் மாத்திரமல்ல இந்த மண்னோடும் இரண்டறக் கலந்து மணக்கும் தொழில். இருந்தும் வினைத்திறனான ஆளணி இல்லாமை அதன் பசுமைப் புரட்ச்சிக்கு அணிசேர்த்து இருக்கவில்லை அதனால்தான் இன்று போட்டிபோட முடியாத முடங்கிய இலாபமற்ற விருப்பமில்லாத புரட்சியில்லாத துறையாக தள்ளப்பட்டுள்ளது. இந்த ஒரு இக்கட்டான நிலையில்தான் உழுது பண்படுத்தும் விவசாயிகளை பழுதுபடாமல் எடுத்தேத்தும் எமது மாவட்டத்தின் கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கான புதிய உதவி ஆணையாளராக திரு நடராசா. சிவலிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பல திட்டங்களில் பணிபுரிந்திருந்தாலும் குறிப்பாக இவர் சுமார் 9 வருடங்கள் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தில் வடக்கிலும், கிழக்கிலும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து, பசுமைப்புரட்சியை ஏற்ப்படுத்தி பேர் பெற்ற ஒரு அனுபவ சாலியாக இருக்கிறார். அத்துடன் உன்மையான விவசாயிகளின் நிலையை நாடி பிடித்து உதவும் தன்மை கொண்ட ஒரு உத்தியோகஸ்த்தர் என்பது இந்த மாவட்டத்தின் ஏக்கத்தினை பூர்த்திசெய்ய போதுமானதாக இருக்கிறது. இவர் முல்லைத்தீவு, மன்னார், மற்றும் அம்பாரை போன்ற இடங்களில் அனர்த்தம், யுத்தம் போன்ற இக்கட்டான காலங்களிலும் 2004 ஆம் ஆண்டில் இருந்து பணி புரிந்து அந்த விவசாய பெருங்குடி மக்களின் நன்மதிப்பினை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் காரைதீவு கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்து, வறுமை குடும்பத்தினை வாட்டியபோதும், பெருமை சேர்க்க பொறியியலாளர் பட்டத்தினை பேராதனை பல்கலைக்களகத்தில் முடித்து, அதன் பிறகு தனது பொறியியல் முதுமானியினை மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும், பொருளாதார அபிவிருத்தி முதுமானியினை கிழக்கு பல்கலைக்கழகத்திலும் முடித்து துறை தேர்ந்த கல்வியினை தன்வசம் கொண்டுள்ள ஒரு பொருத்தமான உத்தியோகத்தராக இருக்கிறார், என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
புதிதாக 07.01.2013 அன்று பதவி ஏற்றிருக்கும் மாவட்ட விவசாய அவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் அவர்கள் விவசாய பெருங்குடி மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் காலடி எடுத்து வைத்திருப்பது ஒரு சாவாலாகவும் அதே நேரம் மக்களை மாற்றுவதற்க்கான சந்தர்ப்பமாகவும் பயன்படுதுவார் என்பது உறுதி.
நன்றி உண்மைகள்
Ingen kommentarer:
Legg inn en kommentar