torsdag 9. mai 2013

பொதுவாய அரச தலைவர்கள் மகாநாடு




இலங்கையில் நடைபெற விருக்கும்நல பொதுவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மாகாராணி சார்பில், இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்வார் என பொது நலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார். நீண்டதூரம் பயணம் செய் வதைத் தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய மகாராணி எடுத் திருக்கும் இத்தீர்மானத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இளவரசர் சார்ள்சை வரவேற்பதாக கமலேஷ் சர்மா விடுத்திருக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ் வுகளில் மகாராணியைப் பிரதிநிதித் துவப் படுத்தி அரச குடும்பத் தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமையையும் கமலேஷ் சர்மா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளார்.
வைகாசி 08, 2013

நன்றி-சூத்திரம்http://www.sooddram.com/

onsdag 8. mai 2013

கீதாசார தர்மப்போர்





பிரபாகரன் நடத்தியது கீதாசார தர்மப்போர்; சிங்களப் பேராசிரியர் தெரிவிப்பு

இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற தொல்பொருளியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் குலதுங்க, "பிரபாகரன் போரில் ஈடுபட்டது பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டுதான்'' என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வரலாற்றை எடுத்துக்கொண்டால், நடந்த போர் நிச்சயமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்காது. அது மதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்திருக்கிறது.

துட்டகைமுனுவின் போர் கூட இனவாதத்தின் அடிப்படையில்தான் நடத்தப்பட்டதாக கடந்த பல காலங்களில் கூறப்பட்டன. ஆனால் எந்தவொரு நூலிலும், ஆவணத்திலும் எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையிலான போர் இனவாதத்தின் அடிப்படையில் நடந்ததென்று குறிப்பிடப்படவில்லை.

எல்லாள மன்னனைப் பற்றி மகாவம்சத்தில் 23 விதந்துரைகள் இருக்கின்றன. அதில் முதலாவது மற்றும் இறுதி விதந்துரைகளைத் தவிர ஏனைய எல்லாவற்றிலும் அவரைப்பற்றி நன்றாகத்தான் சொல்லப்பட்டுள்ளது.

நமது நாட்டைப் பொறுத்தவரை கலாசாரம்கூட இந்தியக் கலாசாரத்தையே அடியொற்றி வந்திருக்கிறது. எமது நாட்டில் போரில் ஈடுபட்ட பிரபாகரன் கூட இந்திய நூலான பகவத்கீதையின் பல விடயங்களை அடியொற்றித்தான்
அதில் குதித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் குலதுங்க

நன்றி-உதயன்http://www.lankasri.com/ta/link-33e6C332RS.html

søndag 17. mars 2013

தமிழீழம்



தமிழீழம் ஒன்றே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை தமிழர் கடற்கரையில் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது.

தமிழீழம் அமைய போராடும் மாணவர்களுக்காகவும் , தமிழீழம் அமைய இலங்கையின் மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும் , ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு கோரியும் இந்த ஒன்று கூடல் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு தங்கள் தமிழ் ஈழத்திற்கான தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அனைவரும் தமிழீழமே ஒரே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்தனர்.

இலங்கையில் நடந்தது போற்குற்றமல்ல , அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்ற செய்தியை அழுத்தமாக பதிவு செய்தனர். இந்த நிகழ்விற்கு பீகாரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் திரு சோம் பிரகாஷ் வருகை தந்திருந்தார்.

இவர் ராஜக்பக்சே பீகார் வந்த போது அவருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி முழக்கமிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு பழ நெடுமாறன் , திரு வைகோ போன்ற தலைவர்கள் இந்த கூட்டத்திற்கு வந்து சிறப்புரை ஆற்றினர்.

அனைவரும் தமிழீழமே ஒரே தீர்வு என்று விண்ணதிர முழக்கமிட்டனர்.

ஐநா வில் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் நகலை மாணவர்கள்
தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நன்றி -jvpnews

tirsdag 5. mars 2013

காணாமல் போனோர் உறவுகள்


எம்மிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள் - மழைக்கு மத்தியில் மெழுவர்த்தி ஏந்தி மக்கள் போராட்டம்

"எங்களிடமிருந்து பறித்த எங்கள் குழந்தைகளை எங்களிடம் தாருங்கள்" என்று கொட்டும் மழையில் மத்தியில் மெழுகு வர்த்தி ஏந்தி,  நெஞ்சம் கனக்க மக்கள் போராட்டம் ஒன்று வவுனியா நகர சபையின் வாசலில் இடம்பெற்றுக்  கொண்டிருக்கிறது. 

வடக்கு -கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில்போ காணாமல் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வு நாளை காலை 9 மணியளவில் கொழும்பு - விகாரமா தேவி பூங்காவில் நடாத்தப்பட்டு, பொது நூலகத்தில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், கூட்டத்தின் மூடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த பொதுமக்களை தொடர்ந்து பயணிக்க அநுமதிக்க முடியாது எனத் தெரிவித்து - பொலீஸ் ட்ரக் வண்டியை வீதியின் குறுக்கே நிறுத்தி பொலீசார் தடுத்து வைத்ததனைத் தொடர்ந்து வீதியில் மெழுவர்த்திகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர

"எங்களிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்", "ஏதுமறியா எங்கள் பாலகர்கள் எங்கே?", "கவறு இருந்தால் நிரூபியுங்கள் இல்லையேல் விடுதலை செய்யுங்கள்" போன்ற கோசங்களை வானதிரக் கத்தியவாறு மழைக்கு மத்தியிலும் - நடுவீதியில் கண்ணீர்மல்க உறவுகளைத் தவறிவிட்டவர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
நன்றி- உதயன்


lørdag 23. februar 2013

பாலச்சந்திரன்




விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு, இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் உண்ணக்கொடுத்து, பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கான புதிய ஆதாரங்களாக தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
பிரபாகரனின் இளைய மகனின் புகைப்படங்கள் மட்டுமன்றி, நெஞ்சை அதிரவைக்கும் இன்னும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருக்கின்றன என சனல்4                                 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லும் மக்ரே தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸர்கி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய விடியோவையும், அது தொடர்பான தகவல்களையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமது கவனத்தில் கொண்டுள்ளார் என மார்ட்டின் நெஸர்கி தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைக்கப்பட் தேசிய முன்னெடுப்புகள், நேர்மை ஆகியவற்றினூடாகப் பொறுப்புக்கூறும் கடமையை இலங்கை மேற்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தை இடைவிடாமல் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தி வருகின்றார் என்றும் அவரின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்
.
பிரபாகரனின் இளைய புதல்வர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் இராணுவப் பதுங்குகுழிக்குள் அமர்ந்து பிஸ்கட் சாப்பிடும் சம்பவத்தைக் கொண்ட விடியோ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐ.நா. கவனத்தில் எடுத்துக்கொண்ட விடயத்தை நெஸர்கி தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய திகிலூட்டும் இந்த விடியோ குறித்து இத்தருணத்தில் ஐ.நா. நேரடியாக எக்கருத்தையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பொறுப்புக்கூறும் கடமையை மேற்கொள்வதன் மூலம் தேசிய நல்லிணக்கப்பாட்டையும் இலங்கை தோற்றுவிக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் எதிர்பார்க்கின்றார் சமீபத்தில் வெளியிடப்பட்ட விடியோவையும், அது தொடர்பான தகவல்களையும் வெளிப்படையாகவே நாம் அறிவோம்.
எனினும், அது தொடர்பாக என்னிடம் திடமான கருத்து எதுவும் கிடையாது” என்றும் அவர் கூறியுள்ளார

கேள்வியொன்றுக்கு ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்கையில்
“இலங்கையில் நிலவிய யுத்த காலத்தில் ஐ.நா. விட்ட தவறுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக பான் கீ மூனால் நிறுவப்பட்ட குழு இலங்கையில் நடைபெற்ற யுத்தகால சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இது உள்ளகக் கடமைக்கான ஒரு குழு ஐ.நாவுக்குள் எவ்வாறு பரிந்துரைகளை முன்னெடுக்க முடியும் என்பதை ஆய்வதற்கான ஓர் அமைப்பு. அதனால் இலங்கையில் நடைபெற்ற உண்மையான சம்பவங்கள் குறித்து கருத்துச் செலுத்த முற்படவில்லை.
இவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் சம்பந்தப்பட்டதே இரண்டாவது அறிக்கை”  என்றும் மார்ட்டின் நெஸர்கி விளக்கியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா மாநாடு நெருங்கி வரும் சூழ்நிலையில், பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதற்கான புதிய போர்க்குற்ற ஆதாரங்களாக நெஞ்சை அதிர வைக்கும் புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி இயக்குநரிடமிருந்து பெற்று லண்டனின் “த இன்டிபென்டென்ட்’ நாளேடு மற்றும் இந்தியாவின் “த இந்து’ நாளேடு என்பன வெளியிட்டிருந்தன.
இதையடுத்து, பாலச்சந்திரன் உயிருடன் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதையும் பின்னர் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும் இப்புகைப்படங்கள் தெளிவாகவே காட்டுகின்றன என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டு,அரச த இலங்கை ரப்பின் மறுப்புக ை நிராகரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



மட்டக்களப்பு நகரம்



மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் நகரின் மத்தியிலுள்ள பிரதான மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தின் வேலைகள் இன்று ஆரம்பமாகியன. அத்துடன் அந்த சுற்றுவட்டத்தில் இருந்த காந்தி சிலையும் அகற்றப்பட்டு பிரிதொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ்; நகரின் மத்தியில் உள்ள காந்தி சதுக்கம், காந்தி பூங்காவாக மாற்றம்பெறுகிறது. தேசத்தின் மகுடம் (தெயட்ட கிருள) வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த அபிவிருத்தி திட்டத்துக்கென 38.301 மில்ய் லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.
இதில், மட்டக்களப்பு மாநகர சபை 1.98 மில்லியன் ரூபாய்க்கு வீதி அபிவிருத்திக்கான வேலைகளையும் சிலைகள் நிறுவுதல், சுற்று வேலை அமைத்தல், கொங்கிறீற் இடுதல், புற்தரை அமைத்தல் உள்ளிட்ட வேலைகளை 36.31 மில்லியன் செலவில் நகர அபிவிருத்தி அதிகார சபையும் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.  2030 வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், 28 இணைத்திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் முதலில் 7 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, மட்டக்களப்பு கோட்டை, விமான நிலையம், வெள்ளைப்பாலம், காந்தி சதுக்கம், வெபர் மைதானம், மட்டக்களப்பு வாயில் உள்ளிட்ட பகுதிகள்; புனரமைக்கப்படவுள்ளன. 
விமானநிலையமானது இரண்டு பில்லியன் செலவிலும், ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் மற்றும் 25 ஏக்கரில் 250 மில்லியன் செலவில் கைத்தொழில் பேட்டை,  மட்டக்களப்பு நகரிலுள்ள பாலங்கள் அகலமாக்கப்பட்டு 1.2 பில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தின் போது மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு அந்த சிலை பிரிதொரு இடத்தில் நிர்மாணிக்கப்படும் என்று மட்டக்களப்பு நாநகர சபை மேயர் சிவகீத்தா பிரபாகரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

நன்றி -உண்மைகள்

onsdag 20. februar 2013

பாலச்சந்திரன் கொலை


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

பதுங்குகுழி ஒன்றில் பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது மற்றும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய நான்கு ஒளிப்படங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒளிப்படங்களின் சுயதரவுகளின் படி, 2009 மே 19ஆம் திகதி காலை 10.14 மணிக்கும், 12.01 மணிக்கும் இடையில் ஒரே ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

எனவே, பாலச்சந்திரன் மே 19ஆம் திகதி நண்பகலுக்கு சற்று முன்னதாகவே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இது கேள்விக்கிடமின்றி நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை என்று தாம் உறுதிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி-  உதயன்