tirsdag 29. januar 2013

ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?


வெள்ளையர்கள் இருக்கும் போதே விதைக்கப்பட்ட இன வேற்றுமை , சமூக ஏற்றத்தாழ்வுகளின் விதைகள் அவர்கள் வெளியேறியதன் பின்னர் அவர்களே எதிர்பார்க்காத அறுவடையைத் தந்தது இலங்கையின் கடந்த கால வரலாறு.

இந்த வரலாற்றின் ஏக போக விளைச்சலை இனப் பிரச்சினை எனும் பூதம் ஆட்கொண்டதால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியாமல் நாட்டை விட்டு தூர ஓடியர்வர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

இப்போது இனப் பிரச்சினை எனும் பெயரால் இடம்பெற்ற போர் ஓய்ந்துவிட்டது, இனியாவது ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமா

நன்றி-அறிவுடன்

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – அமெரிக்கா அறிவிப்பு




போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – அமெரிக்கா அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 28 சனவரி 2013, 16:04 GMT ] [ கார்வண்ணன் ]
போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர், கொழும்பில் சற்று முன்னர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காப் படைகளை விசாரிப்பதற்கான வாக்குறுதியை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே, ஜெனிவாவில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. 

"கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னர், சிறிலங்கா சிறியளவிலான முன்னேற்றத்தையே காண்பித்துள்ளது. 

ஆனால், இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று வொசிங்டன் நம்புகிறது. 

தமது சொந்த மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அமெரிக்காவும், ஏனைய 23 நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 

மார்ச் மாதம் கொண்டு வரப்படும் புதிய தீர்மானம், சிறிலங்கா மக்கள் மீதுள்ள அமெரிக்காவின் பொறுப்பின் வெளிப்பாடு. 

சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும். 

பொறுப்புக்கூறலை கொழும்பு உறுதி செய்தாக வேண்டும்” என்றும் அவர் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் விக்ரம் சிங், சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்கியதும், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார். 

“ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம், சிறிலங்கா விவகாரத்தை அமெரிக்கா புதுப்பித்துக் கொள்ளவுள்ளது.
நன்றி புதினப்ப்லகை 8097320905256355958#editor/target=post;postID=8573091797165977412

வெள்ள அழிவு



வெள்ளத்தினால் ஏற்ப்பட்ட அழிவு



அறுவடைக்குத்தயாராகவிருந்த ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின
Published on January 26, 2013-2:48 pm   ·   No Comments
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பெய்த அடை மழையை யடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் அறுவடைக்குத்தயாராக விருந்த ஆயிரக்கணக்கான வயல்நிலங்கள் மூழ்கியுள்ளன. இ

lørdag 26. januar 2013

ஜெனிவா மகாநாடு



இலங்கைக்க எதிராக அமெரிக்கா பாயும்?; ஜெனிவா மாநாட்டில் பிரேரணை வரும்

இராஜதந்திர முன்னேற்பாடுகளை இப்போதே அமெரிக்கா முடுக்கிவிட்டிருப்பதாக அறியமுடிகின்றது. ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான மிக முக்கிய தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது. 

இதற்கான இராஜதந்திர முன்னேற்பாடுகளை இப்போதே அமெரிக்கா முடுக்கிவிட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

இதன்படி மார்ச் மாத கூட்டத்தொடரில் பங்கேற்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கை தொடர்பில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும், மார்ச் மாத மாநாட்டில் அது தொடர்பில் பிரேரணையொன்று கொண்டுவரப்படும் சாத்தியம் தொடர்பிலும் ஜெனிவாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இராஜதந்திர மட்டத்தில் முன்னறிவித்தலை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொடர்பில் இந்த முறை ஜெனிவா மாநாட்டில் மூன்று நாள்கள் தனித்தனி அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இறுதி நாள் விவாதம் மார்ச் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆகையால் மார்ச் 15ஆம் திகதியளவிலேயே அமெரிக்கா தனது பிரேரணையை முன்மொழியுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்போது சமர்ப்பிக்கப்படவுள்ள அமெரிக்காவின் பிரேரணைக்கு தற்போது இறுதி வடிவம்கொடுக்கும் முயற்சிகள் முடிவடைந்து விட்டதாக அமெரிக்க இராஜதந்திர உயர்மட்ட வட்டாரங்கள் நேற்று "உதயனி'டம் உறுதிப்படுத்தின.

fredag 25. januar 2013

மட்டகளப்பில் மாற்றம் காணும் விவசாயம்




மட்டக்களப்பின் முதுகெலும்பு என்பதனை விட அதன் இருதயமாக இருப்பது அந்த மாவட்டத்தினை வளப்படுத்தும் மண்ணும் மனிதர்களும்தான். ஒரு பிரதேசம் வளர்ச்சி பெற வளங்கள் தேவை என்பது அபிவிருத்தியாளர்களது சிந்தனையாக இருந்து வந்தது. அது மனித வளம் மற்றும் பௌதிக வளம் என்ற இரண்டையும் குறிக்கும். ஆனால் இவற்றில் பௌதிக வளம் இல்லாமலேயே, மனித வளத்தினை மாத்திரம் உரமாக்கி அபிவிருத்தி கண்ட யப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் எம்முன் உதாரணமாக இருக்கும் போது, எல்லா வளமும் கொண்ட எமது மட்டக்களப்பு மாவட்டம் இன்னும் இன்னும் வறுமையில் தவிக்கும் மாவட்டமாக இருப்பது ஒன்றும் புரியாத புதிர் இல்லை.
விவசாயம் இவர்களின் இரத்தத்தில் மாத்திரமல்ல இந்த மண்னோடும் இரண்டறக் கலந்து மணக்கும் தொழில். இருந்தும் வினைத்திறனான ஆளணி இல்லாமை அதன் பசுமைப் புரட்ச்சிக்கு அணிசேர்த்து இருக்கவில்லை அதனால்தான் இன்று போட்டிபோட முடியாத முடங்கிய இலாபமற்ற விருப்பமில்லாத புரட்சியில்லாத துறையாக தள்ளப்பட்டுள்ளது. இந்த ஒரு இக்கட்டான நிலையில்தான் உழுது பண்படுத்தும் விவசாயிகளை பழுதுபடாமல் எடுத்தேத்தும் எமது மாவட்டத்தின் கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கான புதிய உதவி ஆணையாளராக திரு நடராசா. சிவலிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 
இவர் பல திட்டங்களில் பணிபுரிந்திருந்தாலும் குறிப்பாக இவர் சுமார் 9 வருடங்கள் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தில் வடக்கிலும், கிழக்கிலும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து, பசுமைப்புரட்சியை ஏற்ப்படுத்தி பேர் பெற்ற ஒரு அனுபவ சாலியாக இருக்கிறார். அத்துடன் உன்மையான விவசாயிகளின் நிலையை நாடி பிடித்து உதவும் தன்மை கொண்ட ஒரு உத்தியோகஸ்த்தர் என்பது இந்த மாவட்டத்தின் ஏக்கத்தினை பூர்த்திசெய்ய போதுமானதாக இருக்கிறது. இவர் முல்லைத்தீவு,  மன்னார்,  மற்றும் அம்பாரை போன்ற இடங்களில் அனர்த்தம், யுத்தம் போன்ற இக்கட்டான காலங்களிலும் 2004 ஆம் ஆண்டில் இருந்து பணி புரிந்து அந்த விவசாய பெருங்குடி மக்களின் நன்மதிப்பினை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இவர் காரைதீவு கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்து, வறுமை குடும்பத்தினை வாட்டியபோதும்,  பெருமை சேர்க்க பொறியியலாளர் பட்டத்தினை பேராதனை பல்கலைக்களகத்தில் முடித்து, அதன் பிறகு தனது பொறியியல் முதுமானியினை மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும், பொருளாதார அபிவிருத்தி முதுமானியினை கிழக்கு பல்கலைக்கழகத்திலும் முடித்து துறை தேர்ந்த கல்வியினை தன்வசம் கொண்டுள்ள ஒரு பொருத்தமான உத்தியோகத்தராக இருக்கிறார், என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
 புதிதாக 07.01.2013 அன்று பதவி ஏற்றிருக்கும் மாவட்ட விவசாய அவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் அவர்கள் விவசாய பெருங்குடி மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் காலடி எடுத்து வைத்திருப்பது ஒரு சாவாலாகவும் அதே நேரம் மக்களை மாற்றுவதற்க்கான சந்தர்ப்பமாகவும் பயன்படுதுவார் என்பது உறுதி.

நன்றி உண்மைகள்

படுவான்கரை



போரின் சகல அடிகளையும் மௌனமாகத் தாங்கி தாம் அழிவுற்ற கதைகளை வெளிச்சொல்ல வழியேதுமற்று புதைந்து கிடந்த படுவான்கரைப் பிரதேச மக்களினதும், விடுதலைப்போரில் இணைந்து போராடி இன்று எல்லோராலும் கைவிடப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளினதும் கதைகளை இந்நுால் பேசுகிறது. பலநுாறு கேள்விகளை  எழுப்பி, குற்ற உணர்ச்சியை நம்மில் பரவவிடும் மௌனத்தின் குரல்களாக இக்கதைகள் விரிகின்றன.
இலங்கையில் மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் கடந்த பல வருடங்களாக நோர்வேயில் வசித்து வருகின்றார். நோர்வே வெளிநாட்டவர் திணைக்களத்தில் கணனித்துறை ஆலோசகராகப் பணியாற்றும் இவர் எழுத்து, இலக்கியம், சமூகம், பயணங்கள், புகைப்படக்கலை என்பனவற்றில் ஈடுபாடும் செயற்பாடும் உள்ளவர்.
நன்றி உண்மைகள்

படகுச்சேவை



படுவான்கரைக்கும் மண்முனைக்கு இடையிலான வாவியில் நேற்று புதன்கிழமை காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு பழுதடைந்துள்ளது. இதனால் வாவியின் நடுவில் தத்தளித்த நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள், இராணும் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மண்முணைத்துறையை வந்தடைந்துள்ளனர். படகு பழுதடைந்தமையினால் 15 நிமிடங்கள் பயணிக்கும் இந்த வாவியில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பயணிகள் இருந்துள்ளனர்.இந்த படகு இயந்திரம் அடிக்கடி பழுதடைவதனால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை இந்த படகில் பணிப்பதற்காக இரண்டு துறையிலும் பெருமளவிளான பொதுமக்கள் பல மணி நேரம் காத்துநின்றனர். இந்த இடத்திற்கு வருகை தந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.மஹிந்தன் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.இந்த படகு சேவை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

torsdag 24. januar 2013

மீன்மகள் ஏங்குகின்றாள் வாவிமகள் வாடுகின்றாள்…..!!! – படுவான்கரையான்.



 “ஆரியர்போற்றும் அணிசால் இலங்கையிலே
சீரார் குணதிசையைச் சேர்ந்த வளர்புகழும்
ஏரால் இயன்றசெந்நெல் இன்சுவைதீங் கன்னலொடு
தெங்கி னிளநீரும் தீம்பலவி னள்ளமிர்தும்
ஏங்குங் குறையா இயலுடைய நன்னாடு
மட்டக் களப்பென்னும் மாநாடு……..”

என்று புகழ்ந்து பாடப்பட்ட மட்டக்களப்பு தமிழகம் திருக்கோணமலை மாவட்டத்தின் எல்லையாக மகாவலிகங்கை பாய்ந்து செல்கின்றது. வெருகல் கங்கையிலிருந்து தெற்காக சுமார் நூற்றுஐம்பது மைல் நீளமாக குமுக்கன் ஆறுவரையும் வங்காளக்கடலையும் கிழக்கு மேற்காக நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகிய நான்கு வகையான நிலங்களையும் தன்னகத்தே கொண்டு எழில்மிக்க செல்வச்சிறப்புமிக்க நாடாக விளங்குகின்றது. மட்டக்களப்புமாநிலத்தினை மடடக்களப்புவாவிமகள் எழுவான்கரை படுவான்கரை எனஇரண்டாகப்பிரித்து எழில்கொஞ்சும் இளவேனிற் காலநிலையயை தினமும் காலை மாலை காட்சிகளாக இங்குவாழும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்து இன்புற்றிருக்கின்றாள். பஞ்சம் பட்டினி அறியாது நெல்லுக்கோ மீனுக்கோ தேனுக்கோ தினைக்கோ யாரையும் நம்பியிராது தங்கள் மண்ணிலே உழுதுண்டு வாழும் உயர்ந்த மக்கள்தான் கிழக்கில் பிறந்தமக்கள்.

இலங்கையில் கடந்த 30வருடங்களாக இடம்பெறும் காலமாற்றம் அரசியல் மாற்றம் என்பனவற்றிற்கு கிழக்குமாகாணமும் தப்பிவிடவில்லை. விடுதலைப்போராட்டமாக உருவெடுத்து பல மாறாத கொடுமைகளையும் சூறாவழியாகவந்து ஆறாத வடுக்களையும் சுனாமிப்பேரலையாகித் தேறாத சுமையையும் நம்மக்களுக்கு தந்து சென்ற நிலையிலே இன்றுஅகதியாக ஆதரவற்று அல்லோலகல்லோலப்படும் நம்இரத்தங்களின் நிலைகண்டு நாம்வாழாதிருப்பது கொடுமையிலும் கொடுமை.

எவ்வளவுதான் கொடுமைகளும் சோதனைகளும் அழிவுகளும் வந்தாலும் 95 வீதமான கிழக்குமக்கள் இன்றும் தங்கள் மண்ணைவிட்டகலாத மண்ணின் மைந்தர்களாக அங்கிருந்து எந்தக் கொடுமைகளையும் எதிர்த்து நின்று போராடி வாழ்வதை நினைக்கும்போது அவர்ளை நாம் என்னவென்ற போற்றுவது. தமிழ்நாட்டிற்கோ ஐறோப்பாவிற்கோ ஓடும் அளவிற்கு அவர்களது மண்பற்று இன்னமும் விட்டுப்போகவில்லை.

கடந்தவருடம் ஆகஸ்டில் சம்பூரில் தொடங்கிய இடப்பெயர்வுகள் படுவான்கரை வரை கிழக்குமக்களின் வாழ்வில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. வன்னிப்புலிகளிற்கும் இராணுவத்தினருக்கு மிடையிலான பலப்பரீட்சையில் தங்கள் குடும்பத்துடன் சுதந்திரமாக வாழும்சூழல் இன்றி தவிக்கும் பல்லாயிரம் மக்களுக்கு ஆறுதல்கூற யாரும் அற்றநிலையை எண்ணி மட்டக்களப்பு வாவிமகள் கண்ணீர்வடிக்கின்றாள். ஆனந்தவெள்ளத்தில் அள்ளிவிளையாடிய வாவிமகள் ஆதரவற்று அகதிகளாக ஓடிவரும் படுவான்கரைமக்களின் கண்ணீரால் பெருக்கெடுக்கின்றாள்.

வந்தாரைவாழவைத்து அவர்கள் வாழ்வதறகு இடம்கொடுத்து தங்கள் வளத்தைக் கூடஅபகரித்து சென்றவர்களையும் மன்னித்து விருந்தோம்பலில் சிறந்துவிளங்கிய கிழக்குமக்களின் அவலம் இன்று ஐக்கியநாடுகள் சபை வரை போய்விட்டது. புலம்பெயர் தமிழர்கள் வாகரை இடம்பெயர்வில் தொடங்கி இன்றுவரை நடைபெற்றுவரும் இந்த அவலமானநிலைக்கு ஆறுதல் அளிக்க முன்வராதது அவர்களின் நாட்டுப்பற்றையும் தேசிய, பிரதேசப்பற்றையும் கேள்விக்குறியாக்கி நிற்கின்றது.

காலம்காலமாக ஒருதாய் பிள்ளகைளாக தமிழர்களோடு முஸ்லீம்களும் சிங்களவரும் ஒன்றாகவாழ்ந்த நாடு மட்டக்களப்புநாடு. இடையிடையே பல துவே~ அரசியல்வாதிகளாலும் தமிழத்தேசியம் என்றபுல்லுருவிகளாலும் அவ்வினங்களுக்கான உறவுமுறையினை பகடைக்காயக்கி பந்தாடிய காலமும் உண்டு. இருந்த போதும் சூறாவளியின் போதும் சுனாமியன் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்படாத பகுதிகளில் வாழ்ந்த ஏனைய மக்கள் இனமத பாகுபாடின்றி உணவு உடைகளை வழங்கியதுடன் அவர்களின் துன்பத்திலும் பங்குகொண்ட உண்மைச் சம்பங்கள் நாம் அறிந்ததே. இன்று படுவான்கரைமக்களின் இடப்பெயர்வால் காத்தான்குடி வாழ்முஸ்லீம்மக்கள் செய்யும் சேவைகள் இலங்கைத் தமிழர்களைமட்டுமன்றி குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை முக்காடு போடவைத்துள்ளது.

காத்தான்குடியிலே வெள்ளிக்கிழமையன்று இறைவனை வணங்கிய அப்பாவிமுஸ்லீம்களை ஈவிரக்கமின்றி பள்ளிவாசலில்வைத்து சுட்டுத்தள்ளிய அரக்கர்களாலே கடந்த கால்நூற்றாண்டாக இன்னல்பட்டு வாழ்ந்த மக்கள் இன்று தங்கள் சொத்திழந்து சுகமிழந்து உடுக்க ஆடையின்றி இருக்க வீடின்றி தவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவளித்து உணவுபரிமாறும் முஸ்லிம்களக்கு மட்டக்களப்புமக்கள் என்றென்றும் நன்றிக்கடமைப் பட்டவர்களாவர்.

புலம் பெயர்ந்து வாழும் கிழக்குமக்களே! காலம் கடந்துவிடவில்லை நம்மக்களுக்கு நாம்செய்யவேண்டிய கடமை இன்றுஎமக்குள்ளது. அவசர உதவிகளைக் கூடசெய்யமுடியாத நிலையில் அங்குள்ள தொண்டர் நிறுவனங்கள் பலசிக்கல்களுக்குள்ளாகியள்ளனர் அரசாங்கமும் அடிப்படைத்தேவைகளை தாமதமின்றி வழங்குவதாக தெரியவில்லை. அகதிளாக தஞ்சமடைந்து மட்டக்களப்பு ரவுணுக்கு வந்துள்ள படுவான்கரை மக்களின் மனிதப்பேரவலத்தை தடுக்கும்வகையில் இருப்பிடவசதி உணவுவசதி சுகாதாரவசதிகளுக்காகவும் தாமதமின்றி உதவிசெய்யுங்கள். காத்தான்குடி மக்கள் வீட்டிற்கு நூறு ரூபாய் கொடுக்கும் போது நீங்கள் 100 யூரோக்கள் அல்லது 100 டொலர்களை கொடுப்பதற்கு ஏன்தயங்குகின்றீர்கள்? இங்குவாழும் உங்கள் உறவினர் மூலமாக நீங்கள் தனித்தனியாக இந்த உதவியைச் செய்யலாம். சுமார் 15000 குடும்பங்களைச் சேர்ந்த 120000 பேர் தற்போது களுவான்சிக்குடி முதல் வாழைச்சேனை வரை அகதிகளாகவுள்ளனர்;. கிழக்கிலிருந்து சுமார் 75000 உறவுகள் ஐறோப்பா அவுஸ்திரேலியா கனடா அமெரிக்காவென புலம்பெயர்ந்து வாழுகின்றார்கள். கூட்டிப் பெருக்கி பார்த்தீர்களென்றால் அங்குள்ள மக்களின் தற்போதய தேவைகளை வேறுஎந்த உதவியுமின்றி உங்களால் மட்டும் தனியாகசமாளிக்க முடியும். தற்போது நம்இரத்த உறவுகள் அல்லல்பட்டு அவதியுறும்போது உதவாத கிழக்குமாகாணத்தான் மீண்டும் அங்கு சென்று அம்மண்ணின் தண்ணீர் குடிப்பதற்கு அருகதையற்றவர்கள். தற்போது கணக்கு உங்களுக்கு விளங்கியிருக்கும் செய்யவேண்டியவர்கள் நீங்கள்தான்.

søndag 20. januar 2013

கிழக்கு மாகாணப் புகையிரத சேவைகள்



கிழக்கு மாகாணப் புகையிரத சேவைகள் சிறப்பான முறையில் இல்லை என்றுதான் அறிய முடிகிறது. காலதாமதம், மற்றும் பழமையான இருக்கைகள்,  தண்டவாளங்கள் நன்றாகச் சீர் செய்யப்படாமை போன்ற பல குறைபாடுகள் காணப்படுவதாக அறியமுடிகிறது.

lørdag 19. januar 2013

வெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு வெள்ளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 38,177 குடும்பங்களை சேர்ந்த 142,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்  இந்த குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று மட்டக்களப்ப மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 6,098 குடும்பங்களை சேர்ந்த 19,868 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நன்றி - உண்மைகள்

மட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை

பிரதேசசெயலகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகள் மீளாய்வு செய்யப்பட்டு, மீள வரையறை செய்யப்படுகின்ற நடவடிக்கை அப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள சில தமிழ்ப் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் அந்த ஹர்த்தால் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசங்களில் கவனஈர்ப்பு போராட்டங்கள் நடந்துள்ளன.
கடந்த வாரம் மட்டக்களப்புக்கு சென்றிருந்த பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் துனை செயலாளரொருவர் சிவில் அதிகாரிகளுடன் கூடி ஆராய்ந்து பிரதேசய செயலக எல்லைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுத்துள்ளார்.
அந்தத் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்பொருட்டே தமிழ்ப் பிரதேசங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஹர்த்தாலும் கவன ஈர்ப்பும்
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தேச தீர்மானத்தின்படி தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக நிர்வாகங்களிலுள்ள சில தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய காணிகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கோரளை மத்தி மற்றும் ஒட்டமாவடி பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்படுகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகர், செங்கலடி மற்றும் ஆரையம்பதி உட்பட சில தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக அந்த பிரதேசங்களில் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தமிழ் பிரதேசங்களில அழைப்பு விடுக்கப்பட ஹர்த்தாலுக்கு கல்குடா தொகுதி முஸ்லிமகளின் எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் வழமைக்கு மாறாக இன்று வெள்ளிக்கிழமை ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச முஸ்லிம்கள் தமது வியாபார நிலையங்களை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குடா உலமா சபையினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
உத்தேச தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி இன்று வெள்ளிக்கிழமை ஒட்டமாவடி பிரதேச முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் ஐும்மா தொழுகையின் பின் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
உத்தேச எல்லை நிர்ணயத்துக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான வாசகங்களையும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தார்கள்.
இதேவேளை இந்த விவகாரத்தில் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வொன்றை காண்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - உண்மைகள்

fredag 18. januar 2013

மட்டகளப்பு கல்லடி பாலம்



மட்டகளப்பு கல்லடிப் பாலம் மிகவும் பழமை வாய்ந்தது இப்பாலத்தால் நகரம் சிறப்பாக காணப்படுகிறது.

கிழக்குமாகாணம்

.
வ்
கிழக்குமாகாணம் அம்பாறை,மட்டக்களப்பு, திருகோணமலை இன முன்று மாவட்டங்களைஉள்ளடக்கயுள்ளது.இவற்றுள் நகரங்களும் கிராமங்களும் அடங்க்கும்.முன்று மொழிபேசும் மக்களும் இங்குள்ளனர் அரசியல் பின்னணியில் இம்மாவட்டங்களின் முன்னேற்றம் குறைந்தும் கூடியும் உள்ளதை காணலாம்

மட்டகளப்பு கரையோரக்கிராமங்கள்


மட்டகளப்பு கரையோரங்களில் வாழும் மக்களின் அன்றாட சீவியம்  மீன்பிடித்தொழிலின்   மூலம் கிடைக்கும் வருமனத்தாலே தான் கழிகின்றது. கடலில் கொந்தளிப்போ,மற்றும்  மழை, புயல் போன்ற இயற்கை அனத்தன்கள் அவர்கள் வாழ்வை சீரழிக்கின்றன. இதனால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகின்றனர் இதை அரசாங்கமோ வசதி படைத்த மக்களோ கண்டுகொள்வதில்லை.

மட்டகளப்பு மாவட்டம்



மட்டகளப்பு மாவட்டம் இயற்கையின் பாதிப்பினால் பெரும் அழிவுகளை சந்தித்துள்ளது இம்மாவட்டத்தின் சிறு கிராமங்களான ஊறணி மற்றும் கல்லாறு,கல்முனை பிரதேசங்கள் மழையினாலும்,அதனால் ஏற்ப்பட்ட வெள்ளத்தினாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

கிழக்கு மாகணத்தின் பூர்வீகம்


இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணமானது 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தினால் உருவாக்கப்பட்டதாகும். ஆரம்பத்தில் இது வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்ட ஒன்றாக அமைக்கப்பட்டு வட-கிழக்கு  மாகாண சபை என அழைக்கப்பட்டாலும் பின்னர் அது தென்னிலங்கை பேரினவாத சக்திகளின் அரசியல் நிர்பந்தத்தின் விளைவாக வடக்கு வேறு கிழக்கு வேறாக பிரிக்கப்பட்டது.
ஆக இன்று கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் தனித் தனி மாகாணங்களாகும்.
அதன் பிரகாரம் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய மாகாணமாகும்.

mandag 14. januar 2013

மட்டக்களப்பு



மட்டக்களப்பு மாவட்டம் இயற்கையின் கொடுரத்தால் பெரிய அழிவுகளைச் சந்தித்துள்ளது. மழையும் வெள்ளமும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

onsdag 9. januar 2013

மட்டகளப்பு கரையோர கிராமங்கள்


மட்டகளப்பில் கரையோரங்களில் வாழும் மக்களின்  பிரதான தொழில் மீன் பிடித்தலாகும் இதனாலேதான் அன்றாட  சீவியம் நடத்துகின்றனர். கடலில்  கொந்தளிப்பு, மற்றும் மழை புயல் ஏதேனும் ஏற்ப்பட்டால் தொழில்  பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்படுகின்றனர். அவர்கள் வறுமையில் வாடும் போது அரசாங்கமோ வசதிபடைத்த மக்களோ கண்டுகொள்வதில்லை

படுவான்கரை எழுவான்கரை


மட்டுநகர் இரு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது  கதிரவன் தோன்றும்  திசை எழுவான் கரை என்றும் மறையும் திசை படுவான் கரை  என்றும் வகைப்படுதிள்ளனர்.எந்த படுவான்கரையில் வாழும் மக்கள் பெரும்பாலும் வறுமை கோட்டுக்குள் வாழ்பவராக  உள்ளனர்  கரணம்  இயற்கை அழிவுகளும்  பயங்கரவாதமுமாகும்.

மட்டின் மகிமை

மட்டகளப்பு வரைபடம்

மீன் பாடும் தேனாடாம் மட்டகளப்பு பற்றி தொடர்ந்து எழுதவென பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளம் இது.
மீன், பால், தென் என வளமுள்ள பூமியாம் எம் மட்டகளப்பு பிரதேசமானது மூவினத்தினரும் ஏறத்தாள சமமான எண்ணிக்கையில் வாழும் பல்லின பூமி அது.