søndag 17. mars 2013

தமிழீழம்



தமிழீழம் ஒன்றே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை தமிழர் கடற்கரையில் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது.

தமிழீழம் அமைய போராடும் மாணவர்களுக்காகவும் , தமிழீழம் அமைய இலங்கையின் மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும் , ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு கோரியும் இந்த ஒன்று கூடல் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு தங்கள் தமிழ் ஈழத்திற்கான தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அனைவரும் தமிழீழமே ஒரே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்தனர்.

இலங்கையில் நடந்தது போற்குற்றமல்ல , அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்ற செய்தியை அழுத்தமாக பதிவு செய்தனர். இந்த நிகழ்விற்கு பீகாரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் திரு சோம் பிரகாஷ் வருகை தந்திருந்தார்.

இவர் ராஜக்பக்சே பீகார் வந்த போது அவருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி முழக்கமிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு பழ நெடுமாறன் , திரு வைகோ போன்ற தலைவர்கள் இந்த கூட்டத்திற்கு வந்து சிறப்புரை ஆற்றினர்.

அனைவரும் தமிழீழமே ஒரே தீர்வு என்று விண்ணதிர முழக்கமிட்டனர்.

ஐநா வில் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் நகலை மாணவர்கள்
தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நன்றி -jvpnews

tirsdag 5. mars 2013

காணாமல் போனோர் உறவுகள்


எம்மிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள் - மழைக்கு மத்தியில் மெழுவர்த்தி ஏந்தி மக்கள் போராட்டம்

"எங்களிடமிருந்து பறித்த எங்கள் குழந்தைகளை எங்களிடம் தாருங்கள்" என்று கொட்டும் மழையில் மத்தியில் மெழுகு வர்த்தி ஏந்தி,  நெஞ்சம் கனக்க மக்கள் போராட்டம் ஒன்று வவுனியா நகர சபையின் வாசலில் இடம்பெற்றுக்  கொண்டிருக்கிறது. 

வடக்கு -கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில்போ காணாமல் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வு நாளை காலை 9 மணியளவில் கொழும்பு - விகாரமா தேவி பூங்காவில் நடாத்தப்பட்டு, பொது நூலகத்தில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், கூட்டத்தின் மூடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த பொதுமக்களை தொடர்ந்து பயணிக்க அநுமதிக்க முடியாது எனத் தெரிவித்து - பொலீஸ் ட்ரக் வண்டியை வீதியின் குறுக்கே நிறுத்தி பொலீசார் தடுத்து வைத்ததனைத் தொடர்ந்து வீதியில் மெழுவர்த்திகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர

"எங்களிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்", "ஏதுமறியா எங்கள் பாலகர்கள் எங்கே?", "கவறு இருந்தால் நிரூபியுங்கள் இல்லையேல் விடுதலை செய்யுங்கள்" போன்ற கோசங்களை வானதிரக் கத்தியவாறு மழைக்கு மத்தியிலும் - நடுவீதியில் கண்ணீர்மல்க உறவுகளைத் தவறிவிட்டவர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
நன்றி- உதயன்