படுவான்கரைக்கும் மண்முனைக்கு இடையிலான வாவியில் நேற்று புதன்கிழமை காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு பழுதடைந்துள்ளது.
இதனால் வாவியின் நடுவில் தத்தளித்த நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள், இராணும் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மண்முணைத்துறையை வந்தடைந்துள்ளனர்.
படகு பழுதடைந்தமையினால் 15 நிமிடங்கள் பயணிக்கும் இந்த வாவியில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பயணிகள் இருந்துள்ளனர்.இந்த படகு இயந்திரம் அடிக்கடி பழுதடைவதனால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்த படகில் பணிப்பதற்காக இரண்டு துறையிலும் பெருமளவிளான பொதுமக்கள் பல மணி நேரம் காத்துநின்றனர்.
இந்த இடத்திற்கு வருகை தந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.மஹிந்தன் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.இந்த படகு சேவை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Viser innlegg med etiketten மட்டகளப்பு. Vis alle innlegg
Viser innlegg med etiketten மட்டகளப்பு. Vis alle innlegg
fredag 25. januar 2013
படகுச்சேவை
torsdag 24. januar 2013
மீன்மகள் ஏங்குகின்றாள் வாவிமகள் வாடுகின்றாள்…..!!! – படுவான்கரையான்.
“ஆரியர்போற்றும் அணிசால் இலங்கையிலே
சீரார் குணதிசையைச் சேர்ந்த வளர்புகழும்
ஏரால் இயன்றசெந்நெல் இன்சுவைதீங் கன்னலொடு
தெங்கி னிளநீரும் தீம்பலவி னள்ளமிர்தும்
ஏங்குங் குறையா இயலுடைய நன்னாடு
மட்டக் களப்பென்னும் மாநாடு……..”
என்று புகழ்ந்து பாடப்பட்ட மட்டக்களப்பு தமிழகம் திருக்கோணமலை மாவட்டத்தின் எல்லையாக மகாவலிகங்கை பாய்ந்து செல்கின்றது. வெருகல் கங்கையிலிருந்து தெற்காக சுமார் நூற்றுஐம்பது மைல் நீளமாக குமுக்கன் ஆறுவரையும் வங்காளக்கடலையும் கிழக்கு மேற்காக நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகிய நான்கு வகையான நிலங்களையும் தன்னகத்தே கொண்டு எழில்மிக்க செல்வச்சிறப்புமிக்க நாடாக விளங்குகின்றது. மட்டக்களப்புமாநிலத்தினை மடடக்களப்புவாவிமகள் எழுவான்கரை படுவான்கரை எனஇரண்டாகப்பிரித்து எழில்கொஞ்சும் இளவேனிற் காலநிலையயை தினமும் காலை மாலை காட்சிகளாக இங்குவாழும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்து இன்புற்றிருக்கின்றாள். பஞ்சம் பட்டினி அறியாது நெல்லுக்கோ மீனுக்கோ தேனுக்கோ தினைக்கோ யாரையும் நம்பியிராது தங்கள் மண்ணிலே உழுதுண்டு வாழும் உயர்ந்த மக்கள்தான் கிழக்கில் பிறந்தமக்கள்.
இலங்கையில் கடந்த 30வருடங்களாக இடம்பெறும் காலமாற்றம் அரசியல் மாற்றம் என்பனவற்றிற்கு கிழக்குமாகாணமும் தப்பிவிடவில்லை. விடுதலைப்போராட்டமாக உருவெடுத்து பல மாறாத கொடுமைகளையும் சூறாவழியாகவந்து ஆறாத வடுக்களையும் சுனாமிப்பேரலையாகித் தேறாத சுமையையும் நம்மக்களுக்கு தந்து சென்ற நிலையிலே இன்றுஅகதியாக ஆதரவற்று அல்லோலகல்லோலப்படும் நம்இரத்தங்களின் நிலைகண்டு நாம்வாழாதிருப்பது கொடுமையிலும் கொடுமை.
எவ்வளவுதான் கொடுமைகளும் சோதனைகளும் அழிவுகளும் வந்தாலும் 95 வீதமான கிழக்குமக்கள் இன்றும் தங்கள் மண்ணைவிட்டகலாத மண்ணின் மைந்தர்களாக அங்கிருந்து எந்தக் கொடுமைகளையும் எதிர்த்து நின்று போராடி வாழ்வதை நினைக்கும்போது அவர்ளை நாம் என்னவென்ற போற்றுவது. தமிழ்நாட்டிற்கோ ஐறோப்பாவிற்கோ ஓடும் அளவிற்கு அவர்களது மண்பற்று இன்னமும் விட்டுப்போகவில்லை.
கடந்தவருடம் ஆகஸ்டில் சம்பூரில் தொடங்கிய இடப்பெயர்வுகள் படுவான்கரை வரை கிழக்குமக்களின் வாழ்வில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. வன்னிப்புலிகளிற்கும் இராணுவத்தினருக்கு மிடையிலான பலப்பரீட்சையில் தங்கள் குடும்பத்துடன் சுதந்திரமாக வாழும்சூழல் இன்றி தவிக்கும் பல்லாயிரம் மக்களுக்கு ஆறுதல்கூற யாரும் அற்றநிலையை எண்ணி மட்டக்களப்பு வாவிமகள் கண்ணீர்வடிக்கின்றாள். ஆனந்தவெள்ளத்தில் அள்ளிவிளையாடிய வாவிமகள் ஆதரவற்று அகதிகளாக ஓடிவரும் படுவான்கரைமக்களின் கண்ணீரால் பெருக்கெடுக்கின்றாள்.
வந்தாரைவாழவைத்து அவர்கள் வாழ்வதறகு இடம்கொடுத்து தங்கள் வளத்தைக் கூடஅபகரித்து சென்றவர்களையும் மன்னித்து விருந்தோம்பலில் சிறந்துவிளங்கிய கிழக்குமக்களின் அவலம் இன்று ஐக்கியநாடுகள் சபை வரை போய்விட்டது. புலம்பெயர் தமிழர்கள் வாகரை இடம்பெயர்வில் தொடங்கி இன்றுவரை நடைபெற்றுவரும் இந்த அவலமானநிலைக்கு ஆறுதல் அளிக்க முன்வராதது அவர்களின் நாட்டுப்பற்றையும் தேசிய, பிரதேசப்பற்றையும் கேள்விக்குறியாக்கி நிற்கின்றது.
காலம்காலமாக ஒருதாய் பிள்ளகைளாக தமிழர்களோடு முஸ்லீம்களும் சிங்களவரும் ஒன்றாகவாழ்ந்த நாடு மட்டக்களப்புநாடு. இடையிடையே பல துவே~ அரசியல்வாதிகளாலும் தமிழத்தேசியம் என்றபுல்லுருவிகளாலும் அவ்வினங்களுக்கான உறவுமுறையினை பகடைக்காயக்கி பந்தாடிய காலமும் உண்டு. இருந்த போதும் சூறாவளியின் போதும் சுனாமியன் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்படாத பகுதிகளில் வாழ்ந்த ஏனைய மக்கள் இனமத பாகுபாடின்றி உணவு உடைகளை வழங்கியதுடன் அவர்களின் துன்பத்திலும் பங்குகொண்ட உண்மைச் சம்பங்கள் நாம் அறிந்ததே. இன்று படுவான்கரைமக்களின் இடப்பெயர்வால் காத்தான்குடி வாழ்முஸ்லீம்மக்கள் செய்யும் சேவைகள் இலங்கைத் தமிழர்களைமட்டுமன்றி குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை முக்காடு போடவைத்துள்ளது.
காத்தான்குடியிலே வெள்ளிக்கிழமையன்று இறைவனை வணங்கிய அப்பாவிமுஸ்லீம்களை ஈவிரக்கமின்றி பள்ளிவாசலில்வைத்து சுட்டுத்தள்ளிய அரக்கர்களாலே கடந்த கால்நூற்றாண்டாக இன்னல்பட்டு வாழ்ந்த மக்கள் இன்று தங்கள் சொத்திழந்து சுகமிழந்து உடுக்க ஆடையின்றி இருக்க வீடின்றி தவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவளித்து உணவுபரிமாறும் முஸ்லிம்களக்கு மட்டக்களப்புமக்கள் என்றென்றும் நன்றிக்கடமைப் பட்டவர்களாவர்.
புலம் பெயர்ந்து வாழும் கிழக்குமக்களே! காலம் கடந்துவிடவில்லை நம்மக்களுக்கு நாம்செய்யவேண்டிய கடமை இன்றுஎமக்குள்ளது. அவசர உதவிகளைக் கூடசெய்யமுடியாத நிலையில் அங்குள்ள தொண்டர் நிறுவனங்கள் பலசிக்கல்களுக்குள்ளாகியள்ளனர் அரசாங்கமும் அடிப்படைத்தேவைகளை தாமதமின்றி வழங்குவதாக தெரியவில்லை. அகதிளாக தஞ்சமடைந்து மட்டக்களப்பு ரவுணுக்கு வந்துள்ள படுவான்கரை மக்களின் மனிதப்பேரவலத்தை தடுக்கும்வகையில் இருப்பிடவசதி உணவுவசதி சுகாதாரவசதிகளுக்காகவும் தாமதமின்றி உதவிசெய்யுங்கள். காத்தான்குடி மக்கள் வீட்டிற்கு நூறு ரூபாய் கொடுக்கும் போது நீங்கள் 100 யூரோக்கள் அல்லது 100 டொலர்களை கொடுப்பதற்கு ஏன்தயங்குகின்றீர்கள்? இங்குவாழும் உங்கள் உறவினர் மூலமாக நீங்கள் தனித்தனியாக இந்த உதவியைச் செய்யலாம். சுமார் 15000 குடும்பங்களைச் சேர்ந்த 120000 பேர் தற்போது களுவான்சிக்குடி முதல் வாழைச்சேனை வரை அகதிகளாகவுள்ளனர்;. கிழக்கிலிருந்து சுமார் 75000 உறவுகள் ஐறோப்பா அவுஸ்திரேலியா கனடா அமெரிக்காவென புலம்பெயர்ந்து வாழுகின்றார்கள். கூட்டிப் பெருக்கி பார்த்தீர்களென்றால் அங்குள்ள மக்களின் தற்போதய தேவைகளை வேறுஎந்த உதவியுமின்றி உங்களால் மட்டும் தனியாகசமாளிக்க முடியும். தற்போது நம்இரத்த உறவுகள் அல்லல்பட்டு அவதியுறும்போது உதவாத கிழக்குமாகாணத்தான் மீண்டும் அங்கு சென்று அம்மண்ணின் தண்ணீர் குடிப்பதற்கு அருகதையற்றவர்கள். தற்போது கணக்கு உங்களுக்கு விளங்கியிருக்கும் செய்யவேண்டியவர்கள் நீங்கள்தான்.
lørdag 19. januar 2013
மட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை
![]() |
| பிரதேசசெயலகம் |
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகள் மீளாய்வு செய்யப்பட்டு, மீள வரையறை செய்யப்படுகின்ற நடவடிக்கை அப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள சில தமிழ்ப் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் அந்த ஹர்த்தால் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசங்களில் கவனஈர்ப்பு போராட்டங்கள் நடந்துள்ளன.
கடந்த வாரம் மட்டக்களப்புக்கு சென்றிருந்த பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் துனை செயலாளரொருவர் சிவில் அதிகாரிகளுடன் கூடி ஆராய்ந்து பிரதேசய செயலக எல்லைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுத்துள்ளார்.
அந்தத் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்பொருட்டே தமிழ்ப் பிரதேசங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஹர்த்தாலும் கவன ஈர்ப்பும்
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தேச தீர்மானத்தின்படி தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக நிர்வாகங்களிலுள்ள சில தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய காணிகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கோரளை மத்தி மற்றும் ஒட்டமாவடி பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்படுகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகர், செங்கலடி மற்றும் ஆரையம்பதி உட்பட சில தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக அந்த பிரதேசங்களில் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தமிழ் பிரதேசங்களில அழைப்பு விடுக்கப்பட ஹர்த்தாலுக்கு கல்குடா தொகுதி முஸ்லிமகளின் எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் வழமைக்கு மாறாக இன்று வெள்ளிக்கிழமை ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச முஸ்லிம்கள் தமது வியாபார நிலையங்களை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குடா உலமா சபையினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
உத்தேச தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி இன்று வெள்ளிக்கிழமை ஒட்டமாவடி பிரதேச முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் ஐும்மா தொழுகையின் பின் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
உத்தேச எல்லை நிர்ணயத்துக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான வாசகங்களையும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தார்கள்.
இதேவேளை இந்த விவகாரத்தில் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வொன்றை காண்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - உண்மைகள்
onsdag 9. januar 2013
படுவான்கரை எழுவான்கரை
மட்டுநகர் இரு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது கதிரவன் தோன்றும் திசை எழுவான் கரை என்றும் மறையும் திசை படுவான் கரை என்றும் வகைப்படுதிள்ளனர்.எந்த படுவான்கரையில் வாழும் மக்கள் பெரும்பாலும் வறுமை கோட்டுக்குள் வாழ்பவராக உள்ளனர் கரணம் இயற்கை அழிவுகளும் பயங்கரவாதமுமாகும்.
Abonner på:
Innlegg (Atom)


