போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – அமெரிக்கா அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 28 சனவரி 2013, 16:04 GMT ] [ கார்வண்ணன் ]
போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர், கொழும்பில் சற்று முன்னர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காப் படைகளை விசாரிப்பதற்கான வாக்குறுதியை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே, ஜெனிவாவில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
"கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னர், சிறிலங்கா சிறியளவிலான முன்னேற்றத்தையே காண்பித்துள்ளது.
ஆனால், இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று வொசிங்டன் நம்புகிறது.
தமது சொந்த மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அமெரிக்காவும், ஏனைய 23 நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
மார்ச் மாதம் கொண்டு வரப்படும் புதிய தீர்மானம், சிறிலங்கா மக்கள் மீதுள்ள அமெரிக்காவின் பொறுப்பின் வெளிப்பாடு.
சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும்.
பொறுப்புக்கூறலை கொழும்பு உறுதி செய்தாக வேண்டும்” என்றும் அவர் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் விக்ரம் சிங், சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்கியதும், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
“ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம், சிறிலங்கா விவகாரத்தை அமெரிக்கா புதுப்பித்துக் கொள்ளவுள்ளது.
நன்றி
புதினப்ப்லகை 8097320905256355958#editor/target=post;postID=8573091797165977412