விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பதுங்குகுழி ஒன்றில் பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது மற்றும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய நான்கு ஒளிப்படங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒளிப்படங்களின் சுயதரவுகளின் படி, 2009 மே 19ஆம் திகதி காலை 10.14 மணிக்கும், 12.01 மணிக்கும் இடையில் ஒரே ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
எனவே, பாலச்சந்திரன் மே 19ஆம் திகதி நண்பகலுக்கு சற்று முன்னதாகவே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இது கேள்விக்கிடமின்றி நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை என்று தாம் உறுதிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி- உதயன்
Denne kommentaren har blitt fjernet av forfatteren.
SvarSlett