ஐ.நா.வில் மனித உரிமை வல்லுநர்கள் குழு அறிக்கை!
தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
ஜெனீவா: போர் குற்ற விசாரணைகள் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு தவறிவிட்டதாக ஐ.நா. அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் பயணம் மேற்கொண்ட மனித உரிமை வல்லுநர்கள் குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் கடந்த திங்கள் அன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை முழுமையாக முடிக்கப்படாதவுடன், விசாரணை நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடக்கவில்லை என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 1972 முதல் 2009ஆம் ஆண்டு வரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு மட்டும் சட்டவிரோத கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிமாகியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில், தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதலும் இலங்கையில் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு மீது ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மற்றொரு கண்டன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர உள்ள நிலையில்இந்த அறிக்கை முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.
நன்றி -தினகரன்
Ingen kommentarer:
Legg inn en kommentar