tirsdag 5. mars 2013

காணாமல் போனோர் உறவுகள்


எம்மிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள் - மழைக்கு மத்தியில் மெழுவர்த்தி ஏந்தி மக்கள் போராட்டம்

"எங்களிடமிருந்து பறித்த எங்கள் குழந்தைகளை எங்களிடம் தாருங்கள்" என்று கொட்டும் மழையில் மத்தியில் மெழுகு வர்த்தி ஏந்தி,  நெஞ்சம் கனக்க மக்கள் போராட்டம் ஒன்று வவுனியா நகர சபையின் வாசலில் இடம்பெற்றுக்  கொண்டிருக்கிறது. 

வடக்கு -கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில்போ காணாமல் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வு நாளை காலை 9 மணியளவில் கொழும்பு - விகாரமா தேவி பூங்காவில் நடாத்தப்பட்டு, பொது நூலகத்தில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், கூட்டத்தின் மூடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த பொதுமக்களை தொடர்ந்து பயணிக்க அநுமதிக்க முடியாது எனத் தெரிவித்து - பொலீஸ் ட்ரக் வண்டியை வீதியின் குறுக்கே நிறுத்தி பொலீசார் தடுத்து வைத்ததனைத் தொடர்ந்து வீதியில் மெழுவர்த்திகளை ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர

"எங்களிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்", "ஏதுமறியா எங்கள் பாலகர்கள் எங்கே?", "கவறு இருந்தால் நிரூபியுங்கள் இல்லையேல் விடுதலை செய்யுங்கள்" போன்ற கோசங்களை வானதிரக் கத்தியவாறு மழைக்கு மத்தியிலும் - நடுவீதியில் கண்ணீர்மல்க உறவுகளைத் தவறிவிட்டவர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
நன்றி- உதயன்


Ingen kommentarer:

Legg inn en kommentar