விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு, இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் உண்ணக்கொடுத்து, பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கான புதிய ஆதாரங்களாக தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
பிரபாகரனின் இளைய மகனின் புகைப்படங்கள் மட்டுமன்றி, நெஞ்சை அதிரவைக்கும் இன்னும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருக்கின்றன என சனல்4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லும் மக்ரே தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸர்கி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய விடியோவையும், அது தொடர்பான தகவல்களையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமது கவனத்தில் கொண்டுள்ளார் என மார்ட்டின் நெஸர்கி தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைக்கப்பட் தேசிய முன்னெடுப்புகள், நேர்மை ஆகியவற்றினூடாகப் பொறுப்புக்கூறும் கடமையை இலங்கை மேற்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தை இடைவிடாமல் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தி வருகின்றார் என்றும் அவரின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்
.
பிரபாகரனின் இளைய புதல்வர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் இராணுவப் பதுங்குகுழிக்குள் அமர்ந்து பிஸ்கட் சாப்பிடும் சம்பவத்தைக் கொண்ட விடியோ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐ.நா. கவனத்தில் எடுத்துக்கொண்ட விடயத்தை நெஸர்கி தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய திகிலூட்டும் இந்த விடியோ குறித்து இத்தருணத்தில் ஐ.நா. நேரடியாக எக்கருத்தையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பொறுப்புக்கூறும் கடமையை மேற்கொள்வதன் மூலம் தேசிய நல்லிணக்கப்பாட்டையும் இலங்கை தோற்றுவிக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் எதிர்பார்க்கின்றார் சமீபத்தில் வெளியிடப்பட்ட விடியோவையும், அது தொடர்பான தகவல்களையும் வெளிப்படையாகவே நாம் அறிவோம்.
எனினும், அது தொடர்பாக என்னிடம் திடமான கருத்து எதுவும் கிடையாது” என்றும் அவர் கூறியுள்ளார
கேள்வியொன்றுக்கு ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்கையில்
“இலங்கையில் நிலவிய யுத்த காலத்தில் ஐ.நா. விட்ட தவறுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக பான் கீ மூனால் நிறுவப்பட்ட குழு இலங்கையில் நடைபெற்ற யுத்தகால சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இது உள்ளகக் கடமைக்கான ஒரு குழு ஐ.நாவுக்குள் எவ்வாறு பரிந்துரைகளை முன்னெடுக்க முடியும் என்பதை ஆய்வதற்கான ஓர் அமைப்பு. அதனால் இலங்கையில் நடைபெற்ற உண்மையான சம்பவங்கள் குறித்து கருத்துச் செலுத்த முற்படவில்லை.
இவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் சம்பந்தப்பட்டதே இரண்டாவது அறிக்கை” என்றும் மார்ட்டின் நெஸர்கி விளக்கியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா மாநாடு நெருங்கி வரும் சூழ்நிலையில், பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதற்கான புதிய போர்க்குற்ற ஆதாரங்களாக நெஞ்சை அதிர வைக்கும் புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி இயக்குநரிடமிருந்து பெற்று லண்டனின் “த இன்டிபென்டென்ட்’ நாளேடு மற்றும் இந்தியாவின் “த இந்து’ நாளேடு என்பன வெளியிட்டிருந்தன.
இதையடுத்து, பாலச்சந்திரன் உயிருடன் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதையும் பின்னர் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும் இப்புகைப்படங்கள் தெளிவாகவே காட்டுகின்றன என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டு,அரச த இலங்கை ரப்பின் மறுப்புக ை நிராகரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.